
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால், இவரது 31-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஷால் பிலிம் பாக்டரியின் தயாரிப்பு.
மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு , எடிட்டிங் ஶ்ரீகாந்த்.எஸ்.எஸ்..மூர்த்தி கலை இயக்கம் , வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு
இந்தப் படத்தினை புதுமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார்.
‘குள்ளநரிக் கூட்டம்’ மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவித்த ‘தேன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்தாம் சரவணன்.
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இத்திரைப்படம். அரசியல் குத்துகள் இல்லாமல் படம் இருக்காது என்று நம்பலாம்.












