
சிலம்பரசனின் அண்மைக்குரிய சிநேகிதியாகி இருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்சன்.
மாநாடு படத்தின் வழியாக மலர்ந்தது நட்பு .
வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு நகரும் சினிமா உலகில் மனிதம் ,நட்பு ,கருணை ,அன்பு கலந்த நண்பராக பழகி வாழ்கிற எஸ்.டி .ஆரை நடிகைக்கு மிகவும் பிடித்து விட்டது.
நடிப்பைப் பார்த்து வியந்து போனதாக நடிகை கல்யாணி சொல்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தற்போது ஊரடங்கு நெறிமுறைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு முடிவுறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிலம்பரசனின் நடிப்பு ,மாநாடு பற்றி கல்யாணி என்ன சொல்கிறார் தெரியுமா?
“மாநாடு படத்தில் எனக்கு பிடித்த காட்சிக்கான படப்பிடிப்பை இன்று முடித்துள்ளேன்.( லவ் ஸீனா ?) வெங்கட் பிரபு சார் மற்றும் அவரது டீம் கலக்கிவிட்டார்கள்.
சிலம்பரசன் சார் ஒரே ஷாட்டில் வேற லெவலில் நடித்து கொன்றுவிட்டார். அதைப் பார்த்து என் தலையே வெடித்துவிட்டது. மற்றும் எஸ்.ஜே. சூர்யா சார் நீங்கள் அந்தக் காட்சியில் பின்னிவிட்டீர்கள். இந்தக் காட்சியை படத்தில் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.












