
கொரோனா பெருந்தொற்றின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்றைய தாக்குதலில் நடிகர் பாண்டு , ஒருதலை ராகம் இப்ராகிம் , கோமகன் ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள் .கோமகன் பார்வை இல்லாத இல்லாத பாடகர். இயக்குநர் சேரனின் படத்தில் பாடியிருப்பார் .நடிகர் விஜய் படத்திலும் நடித்திருப்பார்.
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ,மக்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை..
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.












