
இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
கோடிகளில் சம்பளம். மகனும் மருமகளும் தனித் தனியாக கோடிகளில் வாங்குகிறார்கள்.
“போகும்போது என்னத்த அள்ளிட்டுப் போகப்போறே ? காத்திருக்கிற அண்ணாக்கயித்தையும் அத்துட்டுதான் எரிக்கப்போறான்?”என்பது இவரது பாலிசி.
ஆனால் அமிதாப் பச்சன் என்ன கொடுத்து கிழிச்சாரு என சமூக ஊடகங்களில் நெட்டிசன்ஸ் போட்டு தாக்க கடுமையான பதில் வருகிறது சூப்பர் ஸ்டாரிடமிருந்து!
,”என்னை பொருத்தவரை நன்கொடை அளிப்பது குறித்து பேசுவதை காட்டிலும் செயலில் காட்டுவதையே விரும்புகிறேன்.
அதை விளம்பரம் செய்வது அர்த்தமற்றது. என்னுடைய குடும்பத்தினர் செய்யும் சேவைகள் அனைத்தும் மறைக்கப்பட்டே செய்யப்பட்டு வருகிறது.
நாம் செய்யும் சேவைகள் மற்றும் கொடுக்கும் நன்கொடைகள் பெறுபவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பின்போது தினந்தோறும் 4,00,000 பேருக்கு ஒரு மாதத்திற்கு உணவு அளித்தேன் , 5000 பேருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவை அளித்தேன் ,கொரோனாவால் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் தேவைகள், கல்வி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து வருகிறேன் “என்பதாக தெரிவித்துள்ளார்.
சார் அதெல்லாம் சரி…இதையெல்லாம் நீங்க வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் உங்களை ‘ஆன்ட்டி இன்டியன்ஸ் ‘ என்றுதான் சொல்லுவார்கள்.












