
பிக்பாஸ் வந்த பிறகு சில காலம் பரபரன்னு பேசப்பட்டவர் நடிகை ஓவியா.
தற்போது அவரை எந்த மொழி சினிமாவிலும் பார்க்க முடியவில்லை .ஆனாலும் நடிகை என்கிற கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வப்போது போல்டான அறிவிப்புகளை வெளியிட்டு அந்த பரபரப்பிலேயே காலத்தை கடத்திக்கொண்டிருப்பவர்,
தற்போதைய டாபிக் கொரானா தடுப்பூசி பஞ்சம் !
இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு தேவைப்படுகிற தடுப்பு ஊசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்று பிரதமர் மோடியை விமர்சித்து டெல்லியில் போஸ்டர்களை சிலர் ஒட்டியிருந்தனர்.
ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டலாமா ஐயா?
பாஜகவினர் புகார் செய்ய இதன் தொடர்பாக 20 பேரை அள்ளிக்கொண்டு போனது போலீஸ்.!
இதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “என்னையும் கைது செய்யுங்கள்” அரெஸ்ட் மீ டூ என்று ஆங்கிலம் ,இந்தியில் டிவீட் செய்திருந்தார்.
இந்த டிவீட் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது.
நம்ம நடிகை ஓவியா தன்னுடைய டிவிட்டர் கணக்கில் “இது ஜனநாயகமா ?”என்று கேட்டுவிட்டு “அரெஸ்ட் மீ டூ “என்று ஹேஸ் டேக் செய்திருக்கிறார்.
வருமானவரியின் அடுத்த இலக்கு ஓவியாவாகவும் இருக்கலாம்.












