தற்போதைய ஹாட் டாபிக் கூலி பட வியாபாரம்தான்.!
“எங்கள் தளபதிதான் பாக்ஸ் ஆபிஸ் கிங் ” என்பதாக விஜய்யின் ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவு செய்கிறார்கள். தொடர்ந்து ட்ரோல் பண்ணுகிறார்கள்.
ஆனால் கூலி படத் தயாரிப்பு நிறுவனமோ “கூலி வசூலை முறியடிக்க முடியாது புதிய சாதனை தொடங்கும் ” என்பதை விளம்பரம் வழியாக அழுத்தமாக சொல்லி வருகிறார்கள். என்ன ஒரு மாற்றம் என்றால் ஆயிரம் கோடி சாதனை பற்றி எவரும் வாயைத் திறக்கவில்லை. கோலிவுட் தயாரிப்பு புலிகள் சிலர் “கூலி படத்தினால ஆயிரம் கோடி சாதனை செய்ய முடியாது”என்கிற கருத்தை சொல்லுகிறார்கள்.ஆனால் அதை அவர்களால் அழுத்தமுடன் சொல்ல முடியவில்லை. 
இத்தகைய சூழலில்தான் புதிதாக ஆச்சரியம் ,அதிசயம் என புதிய பார்வையுடன் சோசியல் மீடியாக்களில் சில செய்திகள் வருகின்றன.
கமல் -ரஜினி-லோகேஷ் இணைகிற புதிய படம். ஆர்கே எப் ஐ தயாரிப்பு. கூடவே ரெட் செயின்ட் .இதனால கார்த்தியின் கைதி படம் தள்ளிப்போகிறது .என்பதாக ஒரு செய்தி. மற்றொரு செய்தியில் ரெட் ஜெயண்ட்நிறுவனத்தின் பொறுப்பு இன்பநிதியிடம் செல்கிறது.அமைச்சர் உதயநிதியின் மகன்,முதல்வர் ஸ்டாலினின் பேரன் என்பதால் செய்தி சாத்தியம் என்கிறார்கள்
ஆனால் நான் விசாரித்தவரையில் “அதிகார அறிவிப்பு எதுவுமில்லை சாத்தியமா இல்லையா என்பதை இரண்டு உச்ச நட்சத்திரங்களும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை ” என்பதாக சொல்லுகிறார்கள்.












