கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கிறது ‘கார்வார்’தீவு. சிறியதுதான் . இங்கு படப்பிடிப்பு நடத்தியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் இருவர் .
ஒருவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.
மற்றவர் திருமிகு முரசொலி செல்வம்.
தற்போது அந்த தீவு ஒன்றிய அரசின் பாதுகாப்பில் சிறிய தளமாக இருக்கிறது. இதனால் அங்கு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடையாது . இங்குதான் முரசொலி செல்வம் தயாரித்த திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
இயக்குநர் ராம. நாராயணன். ஒளிப்பதிவாளர் என் . கே . விஸ்வநாதன் ,தயாரிப்பாளர் முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் பத்திரிகை தொடர்பாளர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி நானும் மற்றும் சில பத்திரிக்கையாளர்களும் சென்றிருந்தோம்.
திரு செல்வம் சாருடன் முன்னரே நல்ல பழக்கம் ,என்னை கிண்டல் செய்வது அவரும் ,எஸ். எஸ். சந்திரனும்தான். அவருடன் பழகிய அந்த நாட்கள் இன்னமும் பசுமையாக. ஒருவரை சந்திரன் ஓட ஓட விரட்டியது மறக்க முடியாது. திரு செல்வம் சார் அந்த இருவருக்கும் சமரசம் செய்தது .. அற்புதமான மனிதர். அவர் இன்றில்லை . மறைந்து விட்டார் என்பதை ஏற்க இயலவில்லை.
அவரது இல்லத்தாருக்கு சினிமா முரசம் தனது இறுதி வணக்கத்தை தெரிவித்துககொள்கிறது.
—–தேவிமணி