
நடிகைகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் அவர்களை கதாநாயகி பட்டியலில் இருந்து எடுத்து விடுவார்கள்.
ரசிகர்களிடம் அவருக்கு மவுஸ் இருக்காதாம்.இப்படி ஒரு வித மனோவியாதி கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகம்.
தற்போது அத்தகைய சிக்கல் காஜல் அகர்வாலுக்கு.!
பெரிய தொழிலதிபரை கலியாணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்துகிறவர் மகிழ்ச்சியுடன் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டு வீட்டோடு இருக்காமல் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
தமிழில் ஒப்புக்கொண்ட இரண்டு படங்களை தவிர வேறு புதிதாக எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை.
இவரைப் போற்றி புகழ் பாடிய தெலுங்கு பட உலகமும் கவனிப்பதாக இல்லை. சமந்தாவே நடிக்கிறபோது நாம் நடித்தால் என்ன என்கிற மனப்பான்மையில் வாய்ப்பு தேடி வருகிறார். ஆனால் சமந்தாவும் கஷ்டப்பட்டுதான் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அக்கினேனி குடும்பம் கை கொடுத்துவருகிறது.
கமல்ஹாசன், சிரஞ்சீவி,நாகார்ஜுனா ஆகிய சீனியர்களுடன் நடித்து வருகிற 35 வயதான காஜல் மற்ற நாயக நடிகர்களுடன் நடிப்பதற்காக தன்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.












