
சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவலை கசிய விட்டிருந்தனர்.
“ஷாருக் கானுடன் ஜோடியாக நடிக்கப்போகிறார் நயன்தாரா. பாலிவுட் திக் விஜயம் ஆரம்பமாகிறது டைரக்டர் அட்லீயின் உதவியினால்!”என்பதுதான் அந்த தகவல் .அந்த தகவலின் ஊற்றுக்கண் அட்லீ தரப்புதான் என்கிறார்கள் சிலர்.
அது உண்மையோ பொய்யோ ,தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவர் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
“தற்போது பாலிவுட்டில் பிரவேசிக்கிற எண்ணம் நயன்தாராவுக்கு இல்லை .அவசரம் காட்ட வேண்டாம் என்று அவர் நினைக்கிறார்.பாலிவுட்டில் நடிப்பதாக இருந்தால் தன்னுடைய கேரக்டர் அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என நயன் நம்புகிறார். இந்த விவரத்தை எனக்கு நயன்தாராவின் நண்பர் சொன்னார்”என்பதாக அந்த பிரபலம் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்ல.!
“ஸ்க்ரிப்ட்டை முழுமையாக தெரிந்த பின்னரே நயனின் டேட்ஸ் கிடைக்கும். ஆனால் இன்னும் ஸ்க்ரிப்ட் தயாராகவில்லை என்றே நினைக்கிறேன்.நயனின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை அந்த செய்தி வெறும் வதந்தியே” என்கிறார் அந்த பாலிவுட் பிரபலம்.
ஸோ …அதுவரை ஷாரூக்கானுடன் நயன் நடிக்கிறார் என்பதாக வந்த செய்தி அட்லீ தரப்பினரின் கிளப்பல்தான்,கனவு!












