
ஒளிப்பதிவு திருத்த சட்ட முன்வடிவை யாரெல்லாம் எதிர்க்க வேண்டுமோ அவர்களெல்லாம் மத்திய அரசுக்கு -பாஜகவுக்கு ஆதரவானவர்களாக மாறிவிட்டதால் அல்லது ரெய்டு நடவடிக்கைகள் பாயக்கூடும் என அஞ்சுவதால் கண்டிக்கும் ஆற்றலை இழந்தவர்களாக இருக்கிறார்கள்.
இதனால்தான் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ,சூர்யா,கார்த்தி .இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ,வெற்றிமாறன் ,அமீர் , கவுதம் மேனன் ஆகியவர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் சன் ,ஏஜிஎஸ் ,லைகா போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இவர்கள்தான் அதிக அளவில் படங்களை தயாரிக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் இருக்கிற அசுர பெரும்பான்மையினால் மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.என்றாலும் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது என்பதை உணர வேண்டுமல்லவா?












