
பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோருக்கு சொந்தமான டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள்இது குறித்து உஷா ராஜேந்தரிடம் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த உஷா ராஜேந்தர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறியதும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.












