Sunday, May 3, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை!” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.!

admin by admin
September 15, 2021
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

லிப்ரா நிறுவனம்  சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

You might also like

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

இந்த விழாவில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது…

“. ரவீந்தரும் நானும் ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. என்னிடமும் அவருடன் படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார்.

படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

 சமந்தா எனக்கு நண்பர்  அழகாக இருக்கிறார் தமிழ் பேசுகிறார்  . அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.”என்றார் 

நடிகர் யோகிபாபு கூறியதாவது…

“சாந்தனு ஒரு போன் செய்ததும் வந்து நடித்துதந்தேன் என்று சொன்னார். 15 வருடத்துக்கு முன்னாடி பாக்யராஜ் சார் ஆபீஸ் முன் வாய்ப்புக்காக நின்றிருந்தேன் , அப்போது என்னை கவனித்து, பாக்யராஜ் சார் சித்து பிளஸ் 2 படத்தில் ஒரு காட்சியில் வாய்ப்பு தந்தார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது. அந்த நன்றியுணர்வில் தான் இந்தப்படத்தில் நடித்தேன். இன்னும் எத்தனை படங்கள் சாந்தனு கூப்பிட்டாலும் நடிப்பேன். இந்தப்படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. வாழ்த்தும் உங்கள் அனைவருக்கும் நன்றி”என்றார் 

நடிகர் மிர்ச்சி சிவா கூறியதாவது…

இந்தப்படத்தில் மிகவும் பிடித்தது டைட்டில் தான் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார் ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. பாக்யராஜ் சார்  இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார். எனக்கு டான்ஸில் குரு அவர் தான் அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி.”என்கிறார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகிறபோது  “ரவீந்தர் மிக நல்ல மனிதர். சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பேரை அடித்தோம் என்பது முக்கியமில்லை எவ்வளவு பேரிடம் அடி வாங்கினோம் என்பதே முக்கியம். அது போல் எத்தனையோ தடைகளை தாண்டி சினிமா செய்கிறார் அவர் ஜெயிக்க வேண்டும். சாந்தனு எப்போதோ ஜெயிக்க வேண்டியவர் அவர் கடின உழைப்பிற்காக கண்டிப்பாக ஜெயிப்பார் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துகள்.”என்றார் 

இயக்குநர் ஶ்ரீஜர் கூறியதாவது….

” இயக்குநர் வாசு சாரின் மகன் சக்தி தான் தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. தயாரிப்பாளருக்கு லைன் சொன்னவுடனே அவருக்கு பிடித்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை 2 வருடம் உழைத்து உருவாக்கியிருந்தேன். தயாரிப்பாளர் கேட்டவுடனே உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார். சாந்தனுவுக்கும் கேட்டவுடன் இந்தப்படம் பிடித்துவிட்டது. இந்த டைட்டிலை தந்தது தயாரிப்பாளர் தான். தயாரிப்பாளரின் அக்கறை தான் படம் நன்றாக வர காரணம். ஒளிப்பதிவாளர் ரமேஷ் அதிகம் பேச மாட்டார் இப்படம் விரைவாக முடிக்க காரணம் அவர் தான். இசையமைப்பாளர் தரண், படம் ரசிகர்களிடம் சென்று சேர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. அதுல்யா திறமையான தமிழ் பேசும் நடிகை நன்றாக நடித்திருக்கிறார். இந்தப்படம் முழுதாக உருவாக முழுக்காரணமாக இருந்தவர் சாந்தனு தான். அவரது கேரியரில் இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் ஒரு காமெடி கலாட்டாவாக உங்களை திருப்தி படுத்தும் படமாக இப்படம் இருக்கும் நன்றி.

நடிகை அதுல்யா கூறியதாவது…

முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் செய்ய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் அவருக்கு நன்றி. இயக்குநர் கதை சொன்னபோதே விழுந்து விழுந்து சிரித்தேன். ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாக காட்டியுள்ளார் அவருக்கு நன்றி. நல்ல பாடல்கள் மூலம் படத்தின் வரவேற்புக்கு காரணமாக இருக்கும் இசையமைப்பாளர் தரணுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஊர்வசி மேடமும் இணைந்து நடித்தது பெருமை. சாந்தனு மிக ஸ்வீட்டானவர். இப்படத்தில் மிக ஆதரவாக இருந்தார். படத்தில் நடிக்க நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது…

எனது முயற்சிக்கு ஆதரவாக, பிஸியான நேரத்திலும் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கொரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி.

என் வாழ்க்கை 20/20 வனிதா என போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள்.

யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள். இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னை காப்பாற்றியவர்கள் அவர்கள் தான்.

என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. ஆர்ட் டைரக்டர் படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்து செய்தது தான் அதிகம், ஆனாலும் படத்தை அழகாக கொண்டு வந்துவிட்டார். இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாக படம் வந்துவிட்டதா என்ற நோக்கில் தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் எங்களுக்கு திருப்தியாக வந்திருக்கிறது. நான் நல்ல படம் எடுத்த புரடியூசர் இல்ல ஆனா நல்ல புரடியூசர். நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. இந்தப்படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் படம். எல்லோரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக பார்க்கலாம்.”என்றார் 

நடிகர் இயக்குநர் பாக்யராஜ் கூறுயதாவது…

நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரை கூப்பிட்டு அவரது கஷ்டங்களை சொல்ல சொன்னால், எல்லோரும் சிரிக்கும்படி சுவாரஸ்யமாக சொல்வார். அவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறார். தரண் தான் இன்றைய நாயகன் நான் அறிமுகப்படுத்திவர் ஜெயித்திருப்பது மகிழ்ச்சி.

முருங்கைக்காய் சிப்ஸ் என்றவுடன் முதலில் நான் எடுத்த, அந்த காட்சி ஞாபகம் வருகிறது. முருங்கைகாய் காட்சி முதலில் பலமுறை எடுக்க நினைத்து, காட்சி சரியாக மனதில் வராமல் மூன்று முறைக்கு மேல் எடுத்தேன். இப்போது புகழ் பெற்றிருப்பது சந்தோஷம். சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. நாயகி கோயம்புத்தூர் என்பதே முதலில் தெரியாது அவர் ஆங்கிலத்தில் பேச போகிறார் என தவிர்த்துவிட்டேன் பின்னர் தெரிந்த பிறகு தமிழ் பேசும் பெண் இத்தனை ஜெயித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் நிறைய பாஸிட்வ் எனர்ஜி இருக்கிறது. அதற்காக கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.”என்றார் 

Tags: அதுல்யாசாந்தனுதரண்பாக்யராஜ்முருங்கக்காய் சிப்ஸ்யோகிபாபுஸ்ரீஜர்
admin

admin

Related Posts

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!
News

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

by admin
May 2, 2026
வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !
News

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

by admin
May 2, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!
News

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

by admin
May 2, 2026
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

by admin
May 2, 2026
ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!
News

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 2, 2026

Recent News

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

May 2, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

May 2, 2026
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

May 2, 2026
ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

May 2, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?