அநேகமாக ‘நிசப்தம்’ படம்தான் அனுஸ்கா நடித்து வெளியான கடைசி படமாக இருக்கும். இதற்கு பிறகு அவர் வேறொரு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. செய்தியும் இல்லை.
அதுவரை வெளியாகிவந்த பிரபாஸ் -அனுஸ்கா காதல் கிசு கிசுக்கள் கூட களைத்துப் போய் படுத்துவிட்டன, பிரபாஸுக்கும் கல்யாணம் ஆகவில்லை.அனுஷ்காவும் கன்னி கழியவில்லை .
“என்னடா சோதனை இவர்களுக்கு “என்று சிலர் வருத்தப்பட்டதுடன் சரி.!
பெரிய நடிகை என பெயர் வாங்கிய அனுஷ்கா நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.! வந்த வாய்ப்புகளையும் வாசலிலேயே திருப்பியனுப்பிவிட்டார்.
ஆனால் யு.வி.கிரியேஷன்ஸ் படத்தில் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். நவீன் பொலி ஷெட்டியுடன் நடிக்கிறார்.இது ஒரு வித்தியாசமான காதல் கதை என்கிறார்கள். என்ன வித்தியாசம் என்பது படம் வந்தால்தான் தெரியும். ஆனால் ஒன்னுங்க.இந்த வித்தியாசம் என்கிற வார்த்தையைக் கேட்டு கேட்டு காது மறத்துப்போச்சுங்க !
அனுஷ்கா இந்த படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏனாம்?
“எனக்கு யுவி கிரியேஷன்ஸ் ஹீரோவுக்கு அளிக்கும் மரியாதையை தருகிறார்கள்.என்னுடைய தேவைகள் அறிந்து செயல்படுகிறார்கள் .ஆகவே அவர்களது படத்தில் நடிக்கிறேன்” என்கிறார்.
அதுசரி ,சமந்தா அளவுக்கு ஆடைகளை குறைக்க முடியாத அனுஸ்கா இதுவும் சொல்லுவார் இன்னமும் அதிகமாக சொல்லுவார். பெண்ணே உன் சமத்து.!












