Wednesday, July 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

admin by admin
July 29, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

ஸ்டாண்ட் -அப் காமெடியன் ‘விக்கல்ஸ்’ விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி- Light Weight Baby ‘ என்ற தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 
போட்டிகள் ஏராளமாக உள்ள உடற்பயிற்சிக்கான ஃபிட்னஸ் உலகத்தை பின்னினியாகக் கொண்ட இப்படம்-  பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. காதல்- குடும்பம்- எதிர்பார்ப்புகள்- தனிப்பட்ட லட்சியங்கள் -ஆகியவை மோதிக் கொள்ளும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்வு பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான போட்டிகள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 
ஸ்டாண்ட்- அப் காமெடியனாகவும், ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவராகவும் பிரபலமான ‘விக்கல்ஸ்’ விக்ரம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் நன்கு அறியப்பட்ட ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். இது அவருக்கு அறிமுக திரைப்படமாகும். முற்றிலும் மாறுபட்ட பின்னணியை கொண்ட இந்த ஜோடி – படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே… பார்வையாளர்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 
கே. சி. குரு ( K.C.Guru)  எழுதி, இயக்கும் இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் ( Hitha Studios) நிறுவனம் தயாரிக்கிறது. சாகரா சந்தேஷ் ( Sagara Sandesh) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவாளராக பிரமோத் கோட்டியன் – இசையமைப்பாளராக சரவணன் சுப்பிரமணியம் – படத்தொகுப்பாளராக ஹரிஷ் கொம்மே மற்றும் வசனகர்த்தாவாக ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
படத்தைப் பற்றி இயக்குநர் கே சி குரு தெரிவித்ததாவது….
”கடந்த 45 நாட்கள் ஒரு அற்புதமான பயணமாக அமைந்தன. ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும்… ஒவ்வொரு நகரமும்… இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பம்சங்களை சேர்த்தன. முற்றிலும் மாறுபட்ட உலகங்களை சேர்ந்த இருவரை பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கிய இந்த கதை… தற்போது நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படும் ஒரு படைப்பாக உருவெடுத்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், பட தொகுப்பு அறையில் மற்றொரு உற்சாகமான கட்டம் தொடங்குகிறது. இந்த கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்”.
நாயகன் ‘விக்கல்ஸ்’ விக்ரம் தெரிவித்ததாவது..
”எனது திரை பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும் …அதே சமயம் எழுத்து வடிவிலும்… ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”.
ஆரத்தி கிருஷ்ணா தெரிவித்ததாவது…
”ஃபிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல் ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் நடிப்பு என்னை உணர்வு ரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இந்த திரைப்படத்தை இவ்வளவு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி அமைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பார்வையாளர்கள் இப்படத்தை பார்ப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக் குழுவினர் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். லைட் வெயிட் பேபி – Light Weight Baby ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இப்படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
admin

admin

Related Posts

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!
News

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

by admin
July 29, 2026
அதிரடி நகைச்சுவை படமாக உருவான  ‘மொத ராத்திரி’ !
News

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

by admin
July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !
News

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

by admin
July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !
News

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

by admin
July 29, 2026
இளையராஜாவின் வாரிசு ஜெயன்: ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!
News

இளையராஜாவின் வாரிசு ஜெயன்: ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

by admin
July 28, 2026

Recent News

அதிரடி நகைச்சுவை படமாக உருவான  ‘மொத ராத்திரி’ !

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

July 29, 2026
‘லைட் வெயிட் பேபி’    படப்பிடிப்பு நிறைவு!

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

July 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?