
நடிகை அமலாபாலுக்கு அவ்வளவாக சொல்லிக்கொள்கிற அளவுக்கு கையில் படம் இல்லை.
ஆனாலும் அவரது இன்ஸ்டரா வழியாக கவர்ச்சியான படங்களை வெளியிட்டு கணிசமான அளவுக்கு ரசிகர்களை தக்க வைத்திருக்கிறார்.
இவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வடநாட்டு ஆள் மீது புகார் செய்திருக்கிறார் அமலா பால்.!
யாருய்யா அந்தாளு?
ஆரோவில்லில் அமலாபால் தங்கியிருந்தபோது வீட்டுக்குப்பக்கத்தில் வசித்து வந்த ராஜஸ்தானை சேர்ந்தவர்தான் அந்த ஆள்.
அந்த ஆளை விழுப்புரம் போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












