
ஒரே மகள் இன்னாரை காதலிக்கிறேனென்றதும் சற்றும் தயங்காமல் கல்யாணம் செய்து வைத்தார் சேவியர் பிரிட்டோ. மல்டி மில்லினர். மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர். விஜய்யின் நெருங்கிய உறவு. எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மிக நெருங்கிய உறவு. மாப்பிள்ளையாக வந்தவர் அதர்வாவின் தம்பி ஆகாஷ்.
மருமகனை வைத்து படம் எடுக்க வேண்டுமென்பது ஆசை.! அன்பு மகளின் கட்டளையாகவுமிருக்கலாம், அல்லவா?
2021 ஏப்ரல் 14-ம் தேதியில் வெளியிட்ட அறிக்கையில் “விஷ்ணு வர்தனின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கப்போகும் படத்தை தயாரிக்கப்போகிறோம்.ஆதரவு கொடுங்கள்”என்பதாக கூறியிருந்தார் சேவியர் பிரிட்டோ.
மருமகன் ஆகாஷ்க்கு ஜோடி ஷங்கரின் மகள் அதிதி .
ஆனால் இன்னமும் படம் தயாராகவில்லை.
காரணம் பட்ஜெட் !
17 கோடி என திட்டமிட்ட பட்ஜெட் 25 வரை செலவாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
மருமகன் நடிக்கிறார் என்பதற்காக பணத்தை ஓடுகிற ஆற்றில் கொட்ட முடியுமா? மல்டி மில்லினர் ஆவதற்காக சேவியர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார்? பணத்தின் அருமை புரிந்ததால் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
எடுக்கலாமா ,கை விட்ரலாமா என்கிற யோசனையில் இருக்கிறது கம்பெனி.












