ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா, ஹலிதா ஷமீம் இயக்கத்தில் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள் அளித்திருக்கும் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்து எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே என குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
. அந்தப் பேட்டியில் கதீஜா கூறியுள்ளதாவது,, “என்னை எனது குரலால் மற்றவர்கள் அடையாளப்படுத்த வேண்டும். இவரின் மகள், இவரின் மனைவி என்று என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. நான் ஹிஜாப் அணிந்து வருவதை பலர் ட்ரோல் செய்யலாம்.
நான் அதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். நான் பாடிய ஃபரிஷ்டா, ஆம்னா பிபி என்ற இரண்டு பாடல்களும் பழைய ஸ்டீரியோ டைப்புகளை உடைக்கும் வகையில் இருந்தவை. அதேபோல் காயப்பட்ட உலகத்தை ஆற்றுப்படுத்தி பழைய மரபுகளையும் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையும் மாற்றும் நோக்கில் உருவானது.
இத்தனை வருடங்கள் எங்களை ரொம்பவே பாதுகாப்பாக எங்கள் அப்பா பார்த்துக்கொண்டார். இப்போது என் மீது தீடிரென பலரது கவனம் திரும்புகையில் அதை கையாள்வது எனக்கு புதிதாகவே இருக்கிறது. நாம் சம்பாதித்ததில் 10 ரூபாயோ இல்லை 100 ரூபாயோ பிறருக்கு கொடுப்பது திருப்தியை அளிக்கக்கூடியது.
எனது தாத்தா, அப்பா என என் குடும்பத்தில் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.எனவே அதில் எனது திறமையை வளர்த்துக்கொண்டு மக்களுக்கு அதை எப்படி கொடுக்கிறேன் என்பதில்தான் எனது கவனம் இருக்கிறது” என்றவர்,
தன்மீதான இம்போஸ்டர் சிண்ட்ரொம் என்ற சிக்கல் குறித்தும் கூறுகையில்,”அது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த சிக்கல் என்னைவிட்டு போகும் என்று நான் நம்பவில்லை. எனவே அந்த பயத்தை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறேன். ஏன் வந்தது: சிறந்து விளங்க வேண்டும் என்ற பதற்றத்தின் காரணமாகவும் அது வந்திருக்கலாம். இதே சிக்கல் எனது தந்தைக்கும் வந்திருக்கிறது.
அதை எனது தந்தை கடந்து வந்திருக்கிறார். அதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த உலகம் அமைதியாகவும், சகிப்புத்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும்.மேலும், நம்மை போல் இல்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்”இவ்வாறு அதில் கூறியுள்ளார்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!😍 https://t.co/dJgnGZHRXj
— A.R.Rahman (@arrahman) June 15, 2023













