இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது.
‘ஜவான்’ படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது.
உணர்வுபூர்வமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகிறது.












