நடிகை ஸ்ருதிஹாசன் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் சமூக வலைதளங்களின் மீதும் அதிக ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது அதில் தனது ரசிகர்களிடம், ‘ எதை வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்ற தலைப்பில் உரையாடியும் வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுகையில், ஒரு ரசிகர் அவரிடம்,”உங்கள் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கையில்,”அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் ஆசை.அப்படி ஒரு சரியான வாய்ப்பு எனக்கு அமையுமேயானால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.ஆனால் அது எனக்கு இந்த நிமிடம் வரை நிறைவேறாத கனவாகவே இருக்கிறது .ஏற்கனவே ஒருமுறை என் அப்பாவுடன் இணைந்து ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பணியாற்றினேன்.
ஆனால் அது பாதியிலேயே முடிக்கப்படாமல் நின்று விட்டது. அது எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது .என் தந்தையுடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு ஒரு பெரிய பாக்கியமாக கருதுகிறேன். எதிர்காலத்தில் எனது தந்தையுடன் இணைந்து நடிப்பது என்பது நடந்தாலும் நடக்கலாம். என்றும் அவர் கூறியுள்ளார்













