ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் முதல் வாரத்திலேயே 300 கோடியை தாண்டி விட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வாக அறிவித்து இருந்தது. இரண்டாம் வாரத்தில் படத்தில் வசூல் சற்று சரிந்ததால் ஜெயிலர் திரைப்படம் இதுவரை மொத்தமாக 525 கோடியை வசூலித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயிலர்’ படத்தின் ஒரு காட்சியில், ஆர்சிபி அணியின் ஜெர்ஸி அணிந்து கொண்டு ஒரு நடிகர் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை பேசி இருக்கிறார். .இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும், .எங்களின் ஜெர்சியை அணிந்து கொண்டு பேசுவதால், எங்கள் அணியின் நற்பெயர் கெட்டுப்போகும் என்றும் ஐபிஎல் அணியின் தரப்பு , டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க கோரி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும் போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.













