சென்னையில் நேற்று விஜய் நடத்திய விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில்,புதிய கட்சி குறித்தும் அதன் செயல் பாடுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டு
விட்டது என்கிறார்கள்.தான் மேலும் அவர் தொடங்க உள்ள கட்சிக்கு அவரே தலைவராகவும் நிர்வாகிகள் மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தெடுக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுபடுத்துமாறு பேசிய நடிகர் விஜய், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுமாறும் கட்டளை இட்டு இருக்கிறார்.
வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று விஜய் ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாகவும் . அடுத்த இரண்டு ஆண்டுகள் மக்கள் மன்றத்தினர் தொடர்ச்சியாக களப்பணியாற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு தேர்தலில் நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட விஜய் மக்கள் இயக்க சட்ட வல்லுநர்கள் குழு உடனடியாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.பிப். முதல் வாரத்தில் கட்சி பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதனையடுத்து பிப்ரவரி மாதம் இறுதியில் விஜய் தமது கட்சி பெயர், கொடி, நிர்வாகிகள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி யாருடன் கூட்டணி என்பதும் அப்போது தெரியவரும் என்கின்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.












