கங்குவா படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில்,நடிகர் சூர்யா,தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார்இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ தான் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென ’வாடிவாசல்’ படத்திற்கு முன்பே சூர்யா ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 45வது படமாக உருவாகும் இப்படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ் லீ’ படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












