‘ழென்’ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், ‘தேஜாவு’ இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்,`. இதில் கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்க,கதாநாயகியாக
ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ளார் . இவர்களுடன் ராஜ் அய்யப்பன், பால சரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி, விமல் உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை ராஜா பட்டாசார்ஜி கவனிக்க,பாடல்களுக்கு தர்புகா சிவா இசையமைக்க,அஷ்வின் ஹேமந்த் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ள அரவிந்த் ஶ்ரீநிவாசன் கூறுகையில்,” இப்படத்தின் கதைக்களம் சென்னை . இது வழக்கமான காதல் கதையாக இருக்காது. நாயகன் கிஷன் தாஸ் சிஆர் பி எப் போலீஸ் (கோப்ரா ஸ்குவாட்). நாயகி ஸ்ம்ருதி வெங்கட் . யதார்த்தமாக சந்தித்து கொள்ளும் இவர்கள் இருவருக்குமிடையே அந்த தருணத்தில் ஏற்படும் நட்பு .அதை தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் சம்பவங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் . அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ளது. 2கே காதலை சொல்லும் அதே வேளையில் அந்த கதாபாத்திரங்களுக்கிடையான மெச்சூரிட்டியும் அதில் தெரியும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.இந்த பொங்கல் ரேஸில் கலந்து கொள்ளும் பெரிய படங்களுக்கு மத்தியில் எங்களுக்கும் ஒரு சிறிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுகிறோம். இந்த கதையில் எழுதப்பட்ட எந்த கதாபாத்திரங்களுமே சும்மா அந்த நடிகர்களை போஸ்டருக்காக கேட்ச் பண்ணிக்கலாமேன்னு எழுதப்பட்டு இருக்காது. ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு சிக்னிபிகேண்ட் இருக்கும். என்கிறார்.













