
மறைந்த நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் “படைத்தலைவன்” என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில்,கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ. வெங்கடேஷ், யூகிசேது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இசைஞானி இளையராஜா எழுதி,இசையமைத்துள்ள “உன் முகத்தை பாக்கலையே ” என தொடங்கும் , இந்த பாடலை அனன்யா பட் என்பவர் பாடியுள்ளார். இப்பாடல்
இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட அனைத்து விவரங்களையும் விரைவில் படக்குழுவினர் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.













