அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும் இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளதாம். இந்நிலையில் வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் இறுதி கட்ட பாடல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதன் பின் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.ஏற்கனவே ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தில் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளும் இரவு பகலாக நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக அஜித் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கிவிட்டதாகவும், பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடியும் முன்பே டப்பிங் பணியை முடித்து விட அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.













