அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் வெளியானது.இப்படத்தின் படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்காக ரேவதி என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் இருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு சென்றார். அப்போது கூட்டம் அளவுக்கு மீறி இருந்தது. அதன் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி இனிமேல் தெலங்கானாவில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், மேலும் அதிகாலை காட்சிக்கும் அனுமதி கிடையாதுஎன்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் இறுதி காட்சியில்,அடுத்த பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இப்படத்துக்கு ‘புஷ்பா-3 தி ரேம்பேஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் சிக்கும் புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிலிருந்து தப்பித்தார்களா,இல்லையா? என்பதையும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை புஷ்பா எப்படி பழி தீர்க்கிறார் என்பதையும் சொல்ல உள்ளனராம்.













