தமிழ்த்திரையுலகில் கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான ‘குடிசை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெயபாரதி.தொடர்ந்து இவரது இயக்கத்தில் ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’, ‘குருஷேத்திரம்’, உள்ளிட்ட படங்கள் வெளியாகின.கடைசியாக 2010ம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் சிறப்பு விருது (ஒய்.ஜி.மகேந்திரன்), சிறந்த நடிகை சிறப்பு விருது (சங்கீதா கிரிஷ்) என, தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது. பிறகு ஜெயபாரதி படம் இயக்கவில்லை. அவர் மிகவும் வறுமையில் வாடுவதாக தகவல் வெளியானது. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி எழுத்தாளரும் கூட. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.இந்நிலையில்,இயக்













