தேவரா படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஜுனியர் என்டிஆர்.,அடுத்ததாக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இணைந்துள்ளார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஜுனியர் என்டிஆர் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது, முதல்கட்டகட்சியாக கலவரக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை ஜுனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் பிரஷாந்த் நீல் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள்: குறித்து விரைவில் படக்குழு அறிவிக்கும் என தெரிகிறது.இதில், ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் மலையாள நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோரும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












