பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சல்மான் கான் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 59 வயதாகும் சல்மான் கான் 28 வயதாகும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார், இருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் என்றும்,மகள் வயது உள்ள ராஷ்மிகாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரே என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து சல்மான் கான் பேசுகையில்,”கதாநாயகிக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் உள்ளது என பேசுகிறார்கள். வயது வித்தியாசத்தால் ஹீரோயினுக்கு பிரச்சனை இல்லை. அவரின் அப்பாவுக்கும் அதில் பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை?. ராஷ்மிகாவுக்கு திருமணமாகி மகள் பிறந்தால், அவருடனும் சேர்ந்து நடிப்பேன்” இவ்வாறு அவர் பேசினார் .இந் நிலையில், ராஷ்மிகா மந்தனாவுக்கும் தனக்கும் உள்ள வயது வித்தியாசம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு சல்மான் கானின் பதிலடி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.













