நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை நடிகை தமன்னா முறித்துக் கொண்டார் என வதந்திகள் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத இருவரும் இன்றும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்கிறார்கள், ஆனால் அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படும் செய்திகளை இருவரும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.என்பது குறிப்பிடத்தக்கது . அதே போல் மும்பையில் ஹோலி பண்டிகையை பிரபல நடிகையின் வீட்டில் இருவரும் சேர்ந்தே கொண்டாடியதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமன்னா பாட்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாப்லோ பிக்காசோவின் மேற்கோளை காட்டி “ஒரு நிபுணரைப் போல விதிகளைக் கற்றுக்கொள்ளுங்கள், அதனால் நீங்கள் ஒரு கலைஞரைப் போல அவற்றை உடைக்க முடியும்.”என பதிவிட்டுள்ளார் . எதற்காக இந்த பதிவு ,இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? என புரியாமல் நெட்டிசன்கள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர் காதல் முறிவு பற்றிய வதந்திகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கத் தொடங்கியதிலிருந்து தமன்னா தெளிவற்ற பதிவைப் பகிர்வது இது முதல் முறை அல்ல. முன்னதாக, “ஒரு அதிசயம் நடக்கும் வரை காத்திருக்காதே – ஒன்றை உருவாக்கு” என்று எழுதப்பட்ட மற்றொரு சிந்தனையைத் தூண்டும் மேற்கோளைப் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.













