
வி.ஐ .குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “போகி “என்று பெயரிட்டுள்ளனர் இப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலா.ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்தின் ஒளிப்பதிவை ராஜா சி. சேகர் கவனிக்க,மரியா மனோகர் இசையமைத்துள்ளார் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள எஸ். விஜயசேகரன்.கூறியதாவது,”உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்.சென்னை நகரம் தற்போது உலகத்தரம் வாய்ந்ததாகவும், தொழில்நுட்பம் வானத்தை விட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் ‘ஏஐ’ என்ற புதிய தொழில்நுட்பம் மக்களை மிரட்டும் சூழ்நிலையில் பெண் பிள்ளைகளை பெற்ற தாய், தந்தை,சகோதரர்கள் நாளுக்கு நாள் பதட்டத்துடன் வாழும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுமார் 6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சைக்கிளில் கூட செல்ல முடியாத இந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நாயகன் அழகர் தனது தங்கை கவிதா மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான் சில கிலோமீட்டர் மலையில் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.இறுதியில் கவிதா மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது” என்கிறார். வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை ராஜா சி. சேகர் கவனிக்க,மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.













