நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் முழுஉருவ சிலைக்கு அவரது மகனும் நடிகருமான பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 வது நினைவு தினத்தையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜா, தளபதி தினேஷ், ஶ்ரீமன், நியமன செயற்குழு உறுப்பினர் தாசரதி, சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.














