மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எம்.பி. வருகிற 18.19.20.21. ஆகிய நான்கு நாட்களில் மக்கள் நீதி மய்யத் தலைவர்களை மண்டல வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் .எதிர்வரப்போகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மய்யமும் இடம் பெற்றுள்ளது. அச்சாரமாக நாடாளுமன்ற மேலவையில் ஒரு இடத்தை பெற்றிருக்கிறது.
நடக்கவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்று மைய தலைவர்கள் விரும்புகிறார்கள். சட்டப்பேரவையிலும் ம.நீ .மய்யம் இடம் பெற வேண்டும் என்பது கமல்ஹாசனின் ரசிகர்களின் ஆசையுமாகும். ஆகவே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையின் போது தங்களின் நிலையை எடுத்து சொல்வதற்கு உதவியாக நடக்கவிருக்கிற நான்கு நாள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிஜேபி தொடர்பான ஒரு தகவலும் அடிபடத் தொடங்கி இருக்கிறது.
விஜய் பட ஹீரோயினை தங்கள் வசப்படுத்த பிஜேபியின் தலைவர் ஒருவர் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். பிரபல டான்ஸ் மாஸ்டர் இதற்கு துணையாக இருப்பார் என்றும் சொல்கிறார்கள். இதற்கு இசையாவிட்டால் ரெய்டு விடவும் ஆலோசிக்கப்பட்டதாம். ஹீரோயினை பிஜேபி கொத்திக்கொண்டு போவதால் என்ன லாபம்?
மனரீதியாக விஜய் பாதிக்கப்படலாம். பல ரகசியங்கள் வெளியாகலாம் ,அதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாய்ப்புகள் பறி போகலாம் என்று பிஜேபி நம்புகிறதாம்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்ன மாதிரியான செய்திகளை ,தகவல்களை, யூகங்களை மக்கள் சந்திக்கப்போகிறார்களோ ?
எல்லாம் திருவண்ணாமலையான் திருவருள்.!
ஓம் நமசிவாய !
—தேவிமணி












