இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இந்தப்படம் உருவாகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்று வந்த ‘இப்படத்தின் படப்பிடிப்பில், இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை படமாக்குவதற்காக சிலிண்டரில் வாயு நிரப்பப்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது .
இந்த பயங்கர விபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர் . உடனடியாக அவர்கள் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் .
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுர வாயல் பகுதியை சேர்ந்த மதன் (வயது 26) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய மூவருக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,” படப்பிடிப்பு தளத்தில் இருந்த கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைதாகி உள்ளனர். படப்பிடிப்புக்கு கேஸ் சப்ளை செய்த ஒப்பந்ததாரர் ராமு மற்றும் பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட …பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்..












