
சுபாஷ் கே.ஷா .
மிகவும் பிரபலமான பத்திரிகையாளர். தனது கருத்துகளை தைரியமுடன் வெளியிடக்கூடியவர். நமது கோடம்பாக்கத்து மன்னர்களில் பலருக்கு பேவரைட் எழுத்தாளர்.
இவர் அண்மையில் தமிழக முதல்வர் விஜய்யின் மகன் இயக்குநர் ஜேசன் சஞ்சய்யை சந்தித்துப் பேசி இருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டதை வெளியிட்டிருக்கிறார். அவர்களின் உரையாடலில் விஜய் என்கிற பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
என்ன காரணம் என்பது தெரிந்ததுதான்.!
“அரசியல் பற்றி ஜேசன் சஞ்சய்யின் கருத்து என்ன?”
“நான் அரசியலில் தீவிரமான கருத்துகள் எதுவும் இல்லாதவன்.அரசியல்,மதம், இரண்டையும் எப்போதுமே மிகவும் தனிப்பட்ட விஷயங்களாகவே வைத்திருக்க நான் விரும்புகிறேன். அவர் சி.எம். பெருமையாக கருதுகிறேன்.!”
“அடுத்த நகர்வுகள் திரை உலகில்?”
“சிக்மா .அடுத்து தெலுங்குப்படம் ஸ்டார்ட் ஆகப்போகுது.ஷம்பாலா பட தயாரிப்பாளர். பெரிய பட்ஜெட். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. இதற்கு அடுத்து புதியவர்களை வைத்து படம் பண்ணுகிற ஐடியாவும் இருக்கிறது.”என்றார் இயக்குநர் ஜேசன் சஞ்சய் .












