‘எவர்கிரீன் சாக்லேட் பாய்’ நடிகர் ஆர். மாதவனுக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் கலைப் பிரிவின் கீழ் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு காரணமாக திரையுலகில் 25 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ‘விக்ரம் வேதா’, வெப் சீரிஸ்கள் மற்றும் தற்போது பல பிரம்மாண்ட இந்தி மற்றும் தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவனுக்கு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான ‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்து பன்முக கலைஞராக வலம்வரும் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.












