
‘பக்கா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ்,திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இணையத்தில் செய்திகள்தீயாக பரவி வருகிறது.
இது குறித்து நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது “அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது.
எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோருகின்றனர். இந்த ஊகங்கள் ஒரு கட்டத்தில் பெரிதாகிவிட்டதால், இதற்கு நான் பதிலளிக்க வேண்டும் என்று உணர்கிறேன்.நான் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ (Benz) திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன்.
எனது படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
இவரின் அறிவிப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராகவா லாரன்ஸ் தனது சொந்தச் செலவில் அறக்கட்டளை தொடங்கி, நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி அளித்து அவர்களை மேம்படுத்துகிறார்.
மேலும்,ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை, கல்வி உதவித்தொகை வழங்குவது எனத் தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் நிலையில் அவர் அரசியலில் குதித்தால் கடும் விமர்சனங்களையும் அவர் செய்து வரும் அனைத்து உதவிகளும் அரசியல் ரீதியாகவே பார்க்கப்பட்டு அவர் சில சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம் என்கிறார்கள்












