Tuesday, July 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘இதயம் முரளி’ திரைப்படத்தை நான் தயாரிக்க ஆசைப்பட்டேன்! – இயக்குநர் அட்லீ!

admin by admin
July 7, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

You might also like

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’!

அஜித்திடம் மன்சூர் அலிகான் ‘திடீர்’ கோரிக்கை!

ஏவிஎம் நிறுவனத்தின் “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’’  திறப்பு!

இந்நிகழ்வினில்

நடிகை ஏஞ்சலின் பேசியதாவது..,

இந்த மேடையில் நிற்பதை மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இன்று ‘இதயம் முரளி’ படக்குழுவின் ஒருவராக இந்த மேடையில் நிற்பது மிகவும் பெருமையாக உள்ளது.
ஒரு விஷயத்தை இதுவரை பெரிதாக எங்கும் பகிர்ந்ததில்லை. என் ஊடகப் பயணத்தில் நான் எடுத்த முதல் பிரபலத்தின் நேர்காணல் அதர்வாவுடன்தான். இன்று அவருடனேயே என் முதல் திரைப்படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. காரணம், இதில் கிடைத்த நட்புதான். இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் எங்களுக்கு நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் நாங்கள் ஒரு அழகான பிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். பல இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் உருவாகியுள்ளது. குறிப்பாக, திரையில் எங்களுக்குள் இருக்கும் நட்பின் உணர்வு மிகவும் உண்மையாக வெளிப்பட்டிருப்பதை ரசிகர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

என் திரைப்பயணத்தைத் தொடங்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்க முடியாது என்று நான் உணர்கிறேன். இந்தப் படம் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் உங்களுக்குப் பிடித்த பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது..,

‘இதயம் முரளி’ திரைப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. நான் இதுவரை நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவேன். அப்படிப்பட்ட உணர்வு இல்லாத படங்களில் நான் நடிப்பதில்லை. அந்த வகையில், இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.

இன்று நிகழ்ச்சிக்கு வரும்போது, ஒரு முக்கியமான நபரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒரு புதியதாக ஒன்றை செய்யப்போவதைப் பற்றி பேசினார். அதற்குக் காரணம் ‘இதயம் முரளி’ படத்தின் டீசர்தான் என்று கூறியபோது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தின் மையக்கரு காதல்தான். வாழ்க்கையில் காதல் அனைவருக்கும் வரும். ஆனால், பலருடைய வாழ்க்கையிலும் ஒரு தலைக்காதல் இருக்கும். சிறு வயதிலிருந்தே நமக்குப் பிடித்த விஷயங்களையோ, நமக்குப் பிடித்தவர்களையோ மனதில் ரசித்திருப்போம். ஆனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும், புரியவைக்கவும் பல நேரங்களில் தயங்கியிருப்போம். அந்த ஒரு தலைக்காதலின் உணர்வை மிகவும் அழகாக இந்தப் படம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும். ‘இதயம் முரளி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகாஷ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

நடிகை மோனிஷா பேசியதாவது:

இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் என்ன பேச வேண்டும் என்று நினைத்திருந்ததையே மறந்துவிட்டேன். இங்கே இருக்கும் 90-களின் ரசிகர்களுக்கு ‘கனா காணும் காலங்கள்’ முதல் சீசன் நிச்சயம் நினைவில் இருக்கும். அந்தத் தொடரின் மூலம் என்னை அறிந்த பலரை இன்று மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளேன். அந்த மீள்வரவை ‘இதயம் முரளி’ போன்ற ஒரு அழகான திரைப்படத்தின் மூலம் தொடங்கியிருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அட்லீ சார் இங்கு இருப்பதும் எனக்கு மிகவும் சிறப்பான தருணம். ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் எனக்குப் பிறகு அவரது மனைவி பிரியா இணைந்தார். அதுவும் எனக்கு ஒரு இனிய நினைவாக உள்ளது.

‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நீங்கள் ரசித்த நட்பு, நினைவுகள் மற்றும் உணர்வுகளை விட பல மடங்கு அதிகமான நட்பு, காதல், குடும்ப பாசம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் இந்தப் படத்தில் நீங்கள் காண முடியும். இந்தப் படத்தின் மூலம் எனக்கும் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். வரும் ஜூலை 10-ஆம் தேதி ‘இதயம் முரளி’ திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்தச் சிறப்பான திரைப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது…,

நீங்கள் எங்கள் மீது காட்டும் அன்பு, இதயத்தை திணற வைக்கிறது. நன்றி. அட்லீ சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. குறிப்பாக ‘ராஜா ராணி’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இன்று அவர் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அதர்வா, கயாது, ஏஞ்சலின், ரக்‌ஷன், டிராவிட் உள்ளிட்ட அனைத்து சக நடிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசையமைப்பாளர் தமன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் எனக்கு மிகவும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்தப் பயணம் எனக்கு மறக்க முடியாத நினைவுகளையும், அழகான நட்புகளையும் கொடுத்துள்ளது. அதற்காக ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அனைவரையும் அழகாக காட்டியுள்ளார்கள். ‘இதயம் முரளி’ திரைப்படம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெறும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகை கயாது லோகர் பேசியதாவது:

முதலில் இவ்வளவு நேரம் காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என்மீது காட்டும் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. இந்த அன்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன். எங்கள் நிகழ்ச்சிக்கு வந்துள்ள அட்லீ சாருக்கு நன்றி.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘இதயம் முரளி’ திரைப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு அழகான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அதர்வாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ப்ரீத்தி எப்போதும் எனக்கு நல்ல நண்பராக இருந்து வருகிறார். இப்போது அவருடன் இணைந்து ஒரே படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரக்‌ஷன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

நடிகர் அதர்வா பேசியதாவது:

முதலில் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தப் படத்தின் பயணம் முழுவதும் நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் பயணம் மிகவும் அழகாக அமைந்தது. இளம் தலைமுறையினரின் ஆற்றலுடன் கூடிய ஒரு அருமையான குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

ரக்‌ஷன், டிராவிட் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பாடல்கள், நடனங்கள், காட்சியமைப்பு என படத்தின் ஒவ்வொரு அம்சமும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரின் நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் கவரும். இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. தயாரிப்பாளராக ஆகாஷ் ஏற்கனவே பல படங்களை வழங்கியிருந்தாலும், இயக்குநராக அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் என்பதால் இது அவருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பகத் பாசில், தமன் என சர்ப்ரைஸ் நடிகர் பட்டாளம் படத்தில் உள்ளது அதற்கு காரணம் ஆகாஷ் தான். இறுதியாக, இது அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு மனநிறைவு தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘இதயம் முரளி’ ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இயக்குநர் அட்லீ பேசியதாவது:

ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பும், நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், எளிமையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் சிறப்பாகப் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல், கயாது மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகையாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர் படத்திற்கு அற்புதமான காட்சியமைப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தத் திரைப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது:

‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காதலைக் கொண்டாடும் ஒரு அழகான திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கள் படத்திற்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

“இதயம் முரளி” திரைப்படம் காதல், நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, பகத் பாசில், கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன், ரக்‌ஷன், ஏஞ்சலின், சுதாகர், டிராவிட், தமன், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள இப்படம், இளைஞர்களின் உணர்வுகளையும் காதலின் பல பரிமாணங்களையும் மனதைத் தொடும் வகையில் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது. வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

admin

admin

Related Posts

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’!
News

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’!

by admin
July 7, 2026
அஜித்திடம் மன்சூர் அலிகான் ‘திடீர்’ கோரிக்கை!
News

அஜித்திடம் மன்சூர் அலிகான் ‘திடீர்’ கோரிக்கை!

by admin
July 7, 2026
ஏவிஎம் நிறுவனத்தின் “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’’  திறப்பு!
News

ஏவிஎம் நிறுவனத்தின் “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’’  திறப்பு!

by admin
July 7, 2026
‘சூப்பர் ஹீரோ’ கதாபாத்திரத்தில் அர்ஜு தாஸ்! ரசிகர்கள் அமோக வரவேற்பு!
News

‘சூப்பர் ஹீரோ’ கதாபாத்திரத்தில் அர்ஜு தாஸ்! ரசிகர்கள் அமோக வரவேற்பு!

by admin
July 7, 2026
‘அருள்வான்’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் தனித்துவமானது! – அருள்நிதி!
News

‘அருள்வான்’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் தனித்துவமானது! – அருள்நிதி!

by admin
July 7, 2026

Recent News

அஜித்திடம் மன்சூர் அலிகான் ‘திடீர்’ கோரிக்கை!

அஜித்திடம் மன்சூர் அலிகான் ‘திடீர்’ கோரிக்கை!

July 7, 2026
ஏவிஎம் நிறுவனத்தின் “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’’  திறப்பு!

ஏவிஎம் நிறுவனத்தின் “ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’’  திறப்பு!

July 7, 2026
‘இதயம் முரளி’ திரைப்படத்தை நான் தயாரிக்க ஆசைப்பட்டேன்! – இயக்குநர் அட்லீ!

‘இதயம் முரளி’ திரைப்படத்தை நான் தயாரிக்க ஆசைப்பட்டேன்! – இயக்குநர் அட்லீ!

July 7, 2026
‘சூப்பர் ஹீரோ’ கதாபாத்திரத்தில் அர்ஜு தாஸ்! ரசிகர்கள் அமோக வரவேற்பு!

‘சூப்பர் ஹீரோ’ கதாபாத்திரத்தில் அர்ஜு தாஸ்! ரசிகர்கள் அமோக வரவேற்பு!

July 7, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?