நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவுடன் சென்று முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து வரலட்சுமிசரத்குமார் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது, தளபதி…இந்த போஸ்ட் பற்றி என்ன சொல்வது என்று யோசித்தேன். ஆனால் ஏற்கனவே நிறைய சொல்லியாகிவிட்டது என்பதால் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
மக்கள் 100 விஷயங்களை சொல்வார்கள். ஆனால் சி. ஜோசப் விஜய் தான் நம் முதல்வர். விமர்சிப்பது ரொம்ப எளிது. முதல் தேர்தலிலேயே முதல்வராக தேர்வு செய்யப்படுவது எளிதல்ல.
தமிழக மக்களின் அமோக அன்பால் அது சாத்தியமாகியிருக்கிறது. அந்த பதவியை நாம் மதிப்போமாக.வார்த்தைகளை விட செயல்கள் தான் சத்தமாக பேசும். தொடர்ந்து குறை கண்டுபிடிப்பவர்களுக்கு காலம் உண்மையை சொல்லும். அதுவரை நாம் கொஞ்சம் பொறுமையாக இருந்து மரியாதை அளித்து ஊக்குவிப்போமாக. ஐ லவ் யூ சார்.
நான் எப்பொழுதுமே விஜய் வெறியன். எங்களை சந்தித்து பேசியதற்கு மிக்க நன்றி. இது தான் அவரின் பயணம் என்பது எனக்கு முன்பே தெரியும். சர்கார் செட்டில் நான் அவரிடம் சொன்னதை நினைத்து சிரித்தோம்.
பெண்களின் நலம் தொடர்பாக சில விஷயங்கள் பற்றியும் பேசினோம். உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் சார். உங்கள் தலைமையின் கீழ் தமிழக மக்கள் செழிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.












