ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இனைந்து நடிக்கும் `ஜுமாக்கா’ காமெடி பேண்டஸி படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ஆன்டணி வெளியிட்டுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அசோக் ராம் இயக்கியுள்ளார்
பழமையான கேமாராவை கதைகளமாக கொண்டு ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் காமெடி பேண்டசி படத்தின் படப்பிடிப்பு சற்று நாட்களுக்கு முன் சென்னையில் நிறைவு பெற்றது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு பிரமாண்ட செட் அமைத்து அதில் முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார் மற்றும் வினோத் முன்னா போன்ற பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தின் படம்பிடிக்கப்பட்ட சில காட்சிகளை பார்த்த விஜய் ஆண்டனி இயக்குனர் அசோக் ராமையும், தயாரிப்பாளர் ஜெயக்குமாரையும் பாரட்டியுள்ளார்.












