தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் \சௌகார் ஜானகி( வயது 94.) இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இவருக்கு நேற்று இரவு திடீர் மூச்சு திணறல் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .அவரது உடல் நிலையை மருத்துவர்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தமிழ்த்திரையுலகில் கடந்த 1931 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்.ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, 2022-ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதானபத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் பேத்தியான வைஷ்ணவி அரவிந்தும் ஒரு நடிகையாவார்; இவர் 1987 முதல் பல தமிழ், தெலுங்கிலும், சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.












