வேலையில்லா பட்டதாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.இப்படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது,கோச்சடையான் இந்தியாவின் முதல் கேப்சர் டெக்னாலஜி படமாகவும் முதல் படமே என் அப்பா ரஜினியை இயக்கிய அதிர்ஷடமும் எனக்கு கிடைத்தது வரமாக கருதுகிறேன். வேலையில்லா பட்டதாரி 2 என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது.தனுஷ்,கஜோல் என சீனியர் நடிகர்களை இயக்கியது மகிழ்ச்சியான அனுபவம். வேலையில்லா பட்டதாரி 3 படத்தை இயக்கவும் ஆசை. குழந்தைகளுக்காக ஹாரிபாட்டர் மாதிரி ஒரு படம் தமிழில் எடுப்பேன்.அதே போல் ஒரு ஆக்சன் படம் எடுக்கவும் ஆசை.அக்கா ஐஸ்வர்யா மாதிரி நீங்களும் இயக்குனாராக களமிறங்கியுள்ளீர்களே, உங்க அப்பா சூப்பர் ஸ்டார். அவர் மாதிரி நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா? என பலரும் கேட்கிறார்கள். இது வரை யாரும் நடிக்கச் சொல்லி கேட்க வில்லை அப்படி அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் கதை கேரக்டர் பிடிக்கணும். துருவங்கள் பதினாறு மாதிரியான வித்தியாசமான கதை ,இயக்குனர் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்கிறார்.