மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை லேகா வாஷிங்டனின் ஆண் நண்பரும் , நடிகர் அமீர்கானின் மருமகனுமான பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அமெரிக்கக் குடியுரிமை வைத்துள்ள அவர், வெளிநாட்டவர் சட்ட விதிகளின்படி அரசியல் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதைக் காரணம் காட்டி, வரும் அக்டோபர் 28-க்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என ‘நாட்டை விட்டு வெளியேறும் நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 10 அன்று, ‘சிஜேபி’ அமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பையில் அனுமதியின்றித் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600 பேருடன் நடிகர் இம்ரான் கானும் காவல்துறையினரால் தற்காலிகமாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












