Thursday, November 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

admin by admin
November 12, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பி நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.

இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் “ வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’.

You might also like

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர் கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.

2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இதன் மூலம் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இடம்பெற்றது.

திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. தொலைக்காட்சிகளில் ‘பைரவா’ ஒளிபரப்பாகும்போதெல்லாம் கிடைக்கும் அதிகப்படியான பார்வையாளர் வரவேற்பும், டிஆர்பி எண்ணிக்கையும் இதற்குச் சான்றாக இருப்பதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரவேற்பு மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக, 2017-ல் இப்படம் வெளியானபோது குழந்தைகளாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது வளர்ந்து இளைஞர்களாகியுள்ள நிலையில், தங்களுக்குப் பிடித்தமான ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இந்த மறுவெளியீடு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேபோல், அப்போது திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக அமையும்.

இப்படத்தினை SIM Cine International நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. 2027 புத்தாண்டு கொண்டாட்டம் விஜய்யின் ‘பைரவா’வுடன் தொடங்குகிறது!

admin

admin

Related Posts

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர்  கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!
News

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர் கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

by admin
November 12, 2026
‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’  வெளியானது!
News

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

by admin
November 12, 2026
‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
News

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

by admin
November 12, 2026
‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
News

‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

by admin
November 11, 2026
ஹாரர் திரில்லராக உருவான  ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.!
News

ஹாரர் திரில்லராக உருவான ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.!

by admin
November 11, 2026

Recent News

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’  வெளியானது!

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

November 12, 2026
புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும்  முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026
‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

November 11, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?