ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பது தற்போதய சமுதாயத்தில் உறுதியாக நிரூபணமாகியுள்ளது. நமது நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வெற்றி படங்கள் என்றுமே வந்த வண்ணமுள்ளன.
‘தரமணி’ படத்தின் மூலம் தரமான வெற்றியை தந்த JSK Film Corporation நிறுவனம் தனது அடுத்த படமான ‘ஹௌரா பிரிட்ஜ்’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு திரில்லர் படமாகும். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை லோஹித் இயக்கவுள்ளார். JSK Film Corporation தயாரிப்பில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படவுள்ள மற்றொரு சுவாரஸ்யமான கதை இது. இப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். பிரியங்கா உபேந்திரா இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.நடிகை ஐஸ்வர்யா, ப்ரியங்காவின் மகளாக நடிக்கவுள்ளார். கொல்கத்தாவை மையமாக வைத்து இக்கதை பின்னப்பட்டுள்ளது.


