மகிழ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி. பியூலா மகிழ் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’.
இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி அவர்கள் தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டார். அத்துடன், இத்திரைப்படத்தின் முதற்கட்டத் தொகுப்புக் காட்சிகளை (Rough Cut) நேரில் பார்வையிட்டு ரசித்த முதல்வர், சமுதாயத்திற்குத் தேவையான ஒரு மிக முக்கிய பொதுநலன் சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தை மையமாகக் கொண்டு இக்கதையை உருவாக்கியதற்காகப் படத்தின் நாயகன் தக்ஷன் விஜய் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் உழைப்பை வெகுவாகப் பாராட்டித் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இத்திரைப்படத்தில் தக்ஷன் விஜய் கதாநாயகனாக அறிமுகமாக, அவருடன் இணைந்து லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி மற்றும் அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலா மற்றும் ராஜா ஆகிய இருவர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில், பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள ஒரு பாடல் அமையவுள்ளது. ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதோடு, வரும் அக்டோபர் மாதத்தில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












