காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும்அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி,
தங்கள் அன்புள்ள
விஷால்(பொதுச் செயலாளர்) தென்னிந்திய நடிகர் சங்கம் .