ரஜினி ,கமல் சம்பளத்தை குறைக்க இதான் வழியா?

எரிகிற கொள்ளியில் எதை எடுத்தால் தீ அடங்கும் என்கிற வழி புரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரை உலகம். முன்னர் இல்லாத ‘ஒற்றுமை’ தற்போது இருக்கிறது என்றாலும் அது பொய்யானதுதான்! தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது கோபம் இருந்தாலும் அதை இப்பவே கொட்டிவிடக்கூடாது என்கிற முன் எச்சரிக்கையுடன் பலர் இருக்கிறார்கள்.
இந்த வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்கு அரசு முன்வரவில்லை. அது எதிர்பார்ப்பது எதுவோ?.
இதனால் தயாரிப்பாளர்கள் தானாகவே இரவு பகலாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
நாசர், பொன்.வண்ணன், கார்த்தி, உதயா உள்ளிட்ட பிரபலங்களை வைத்துக் கொண்டு நாசர் பேசுகிறபோது அப்பட்டமான சில உண்மைகளையும் சொன்னார்.
“சினிமாவுக்கு இக்கட்டான நிலைமை! பின்னோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. இதை சரி செய்யத்தான் போராட்டம் நடக்கிறது.அதை முடிவுக்கு கொண்டு வர என்ன வழி என்பதை பொன்வண்ணன் சொல்வார் “என்று நாசர் அவர் பக்கமாக பந்தை தள்ளி விட்டார்.
பொன்வண்ணனும் பந்தை லாவகமாகத்தான் அடித்தார். திரை உலக ‘பந்த் ‘ முடிவுக்கு வருமா என்பது இரண்டொரு நாளில் தெரியும் என எதிர்பார்க்கிறார்கள்.நல்லதே நடக்கும் என நாமும் எதிர்பார்ப்போம்.
” தியேட்டர்களில் ஆன்லைன் ட்ரான்ஸ்பரன்சி கண்டிப்பாக வேண்டும்.அப்படி இருந்தால்தான் படத்தின் வெற்றி, தோல்வியை வைத்து நடிகர்களின் சம்பளத்தை குறைக்க, அல்லது உயர்த்த உதவியாக இருக்கும். ” என்று சொன்னவர் தங்களுக்கு மக்களின் பிரச்னைகளிலும் பொறுப்பு இருக்கிறது என்பதை கோடிட்ட இடங்களை நிரப்புக என்பதைப் போல எழுதிக் கொண்டு விட்டார்.
“காவிரி மேலாண்மை ,ஸ்டெர்லைட் இரண்டு பிரச்னைகளிலும் மக்களுக்கு ஆதரவாக இருப்போம்.அரசிடம் அனுமதி வாங்கி நடத்தப்படும் ” என்றார் பொன்வண்ணன்.
உண்ணாவிரதம்தானே ,?