என்னதான் உண்மையாகப் பொங்கினாலும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றன அரசும்,திமுகவும்!
ஒருவேளை பொங்குவது மாதிரி போங்கு காட்டினால் அதாவது நடித்தால் சேர்த்துக்கொள்வார்களோ என்னவோ!
தமிழகத்தை உலுக்கி எடுத்துவருகிற இரண்டு பிரச்னைகளை மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை.மாநில அரசும் செவி கொடுப்பதில்லை. அரசுகள்தான் சொல்லிவைத்ததைப் போல நாடகமாடி வருகின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,காவிரி மேலாண்மை வாரியம் இரண்டும் பற்றி எரிவது பற்றி கவலைப்படவில்லை .
இன்று தூத்துக்குடி சென்று குமாரரெட்டிபுரத்து மக்களை சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்.
டிவிட்டரில் அவர் பதிவிட்டிருக்கும் கருத்துகள்.:
“அன்பு வீசும் அந்த குமாரரெட்டி புரத்து வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து பார்த்தால் ஞானப்படும் தாய் உள்ளங்களின் ஓலம் கேட்டேன். ஏழை மக்களை மதியாத அரசு சரியும், மக்களே மையம்.வாய்மையே வெல்லும்!
இன்றைய எழுச்சியும் நாளைய வளர்ச்சியும் நாளை நமதே!நிச்சயம் நமதே!” என பதிவிட்டிருக்கிற கமல் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி அளித்த பதிலில் ” காவிரி பிரச்னை பற்றிய கூட்டத்துக்கு தி.மு.க. எங்களை அழைக்கவில்லை. தூத்துக்குடிக்கு வந்திருப்பது தமிழன் என்கிற உணர்வுடன் வந்திருக்கிறேன்.செல்லூர் ராசு சொல்வதுபோல விளம்பரம் தேடி வரவில்லை. ஆயிரம் கேமராக்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்” என சுளீர் என சொல்லி இருக்கிறார்.