ஒரே படத்தில் உச்சிக்குப் போன நடிகர்திலகம் சிவாஜி கணேசனைப் போல ஒரே பாட்டு பாடி உயரம் போனவர் ‘கண்ணடி’ பிரியா வாரியார். புருவம் சற்றே உயர்த்தி கண் அடித்து தலை சாய்த்து சைகையால் துப்பாக்கி சுட்ட பிரியா இன்றைக்கு இளைஞர் பட்டாளத்தின் உற்சாக மருந்து!
“கல்லூரியில் பசங்களை கண்ணடிச்ச பழக்கம் இருக்கா பிரியா?”
“இல்லிங்க. நான் ‘கோ எட்’ காலேஜ்ல படிக்கல.விமன்ஸ் காலேஜ்..ப்ளஸ் டு வரை பசங்களுடன் படிச்சிருக்கேன். இந்த படத்துக்குப் பிறகுதான் ‘கோ எட்’ல படிக்காதது வருத்தமா இருந்தது.ஆனா அந்த படத்தோடு அந்த கவலையும் இல்ல. என்ஜாய் பண்ணி நடிச்சேன்.”
“சினிமாதான் கனவா இருந்ததா?”
“அப்படியெல்லாம் இல்ல .ஆனா இப்போது முன்னணி நடிகை ஆகணும்கிற ஆசை வந்திருக்கு. சாதிப்பேன்.அந்த நம்பிக்கை இருக்கு .நான் நல்ல டான்சர். மோகினி ஆட்டம் ஆட பிடிக்கும்” என்கிறார் பிரியா,